எம்மைப் பற்றி

About Us

Ntamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.
 
பல பிரிவுகளைக் கொண்டு இயங்கிவரும்  Nemosoft நிறுவனத்தின்  ஓர் அங்கமாக தமிழ் மக்களுக்கு தெளிவான செய்திகளை வழங்க வேண்டும் என்பதுடன்  பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான உரிமையையும் மீட்டெடுத்து வழங்குதல் என்ற பல நோக்கங்களைக் கொண்டு கடந்த 2012  ஆண்டு ஐப்பசி மாதம்   Jaffna web என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட எமது செய்திச்  சேவை கால ஓட்டத்தில் பரந்துபட்ட சேவையை வழங்கும் நோக்குடன் 2015-08-25  அன்று www.ntamilnews.com என்ற பெயர் மாற்றம் செய்து சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
 
Nemosoft நிறுவன பணிப்பாளர் அம்பிகைபாகன்  அகீபன் அவர்களின் வழிகாட்டலில் பிரித்தானியாவில் இருந்து இயக்கப்படும் இவ் இணையத்தளமானது இலங்கை ,இந்தியா ,பிரித்தானியா ஆகிய நாடுகளில் வைத்து எமது செய்தியாளர்களால் அனுப்படும் செய்திகள் எமது செய்தியாசிரியர்களினால் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
 
தமிழ் மக்களின் நலனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இணையம் செய்திகளுக்காக எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை எமது சொந்த நிதியிலையே இவ் இணையம் இயக்கப்பட்டு வருகின்றது. மரண அறிவித்தல் போன்றவற்றையும் எமது தளத்தில் இலவசமாக பிரசுரிக்க முடியும். வியாபார விளம்பங்களுக்கு மட்டுமே கட்டணம் அறவிடப்படுகின்றது இதனைத் தவிர வேறு விடயங்களுக்கு நாம் கட்டணம் அறவிடுவதில்லை  என்பதனை நாம் எமது பார்வையாளர்களுக்கு தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
 
அதே போன்று உங்கள் பிரதேசங்களில் அல்லது கிராமங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை அலுவலக மின்னஞ்சலுக்கு  படங்களுடன் எமக்கு அனுப்பி வைக்க முடியும் எமது செய்தியாளர்களைக் கொண்டு உறுதிபடுத்திய பின்னர் அதனை பிரசுரிக்கப்படும்.
 
எமது இணையத்தளத்திற்கு பக்க பலமாக உள்ள பார்வையாளர்கள் ,விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
செய்திகள் அனுப்பி வைக்க
news@ntamilnews.com

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் மரண அறிவித்தல்களை
அனுப்பி வைக்க

service@ntamilnews.com

வியாபார விளம்பரங்கள் சார்ந்து
ads@ntamilnews.comஎம்முடன் மேலதிகமாக தொடர்பு கொள்ள

admin@ntamilnews.com
 
 
நன்றி 
நிர்வாகம் 
www.ntamilnews.com செய்திப் பிரிவு 
 
 

Our Mission

பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான உரிமையையும் மீட்டெடுத்து வழங்குதல்.

Our Vision

சிறந்த கல்வி, கலை, பண்பாடு, மொழி பற்று நிறைந்த சமூகத்தை கட்டி எழுப்புதல்