சற்றுமுன் வவுனியாவில் காருடன் ரயில் மோதி விபத்து: நால்வர் பலி!

சற்றுமுன் வவுனியாவில் காருடன் ரயில் மோதி விபத்து: நால்வர் பலி!

வவுனியா, ஓமந்தை பகுதியில் சற்றுமுன்னர் (ஞாயிற்றுக்கிழமை) காருடன் ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஓமந்தை, பன்றிகெய்தகுளம் குளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையூடாக கார் புகையிரதக் கடவையை கடந்த போதே இவ்விபத்து ஏற்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரமே இவ்வாறு காருடன் மோதியுள்ளது.

குறித்த 6 பேரும் புங்குடுதீவிலிருந்து ஓமந்தையிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.