சற்றுமுன் யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி!

சற்றுமுன் யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23 வயதான என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.