கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த மாணவர்கள்

கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் சிலர் இன்று மதியம் பொரள்ளை கிங்சி வீதியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக பிரவேசித்துள்ளனர்.

சுமார் 10 மாணவர்கள் இவ்வாறு பெண்கள் பாடசாலைக்குள் பிரவேசித்துள்ளனர். இவர்கள் பாடசாலைக்குள் சுற்றி திரிந்ததால் ஏற்பட்ட நிலைமையை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் தப்பியோடிய மாணவர்களில் ஒருவரை பாடசாலைக்கு அருகில் இருந்தவர்கள் பிடித்துள்ளனர்.

சம்பவம் குறித்து கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் அங்கு வந்த பொலிஸார் மாணவனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கொத்தொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 12ஆம் ஆண்டு பயிலும் மாணவனே பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.