இலங்கையில் வடமாகாணத்தை காணவில்லை – அரச இணையத்தளம்

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது.இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.

இலங்கையில் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் காணப்படுகின்றனர். இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்றன. குறித்த 9 மாகாணங்களாவன

1.மத்திய மாகாணம்
2.கிழக்கு மாகாணம்
3.வட மத்திய மாகாணம்
4.வடக்கு மாகாணம்
5.சப்ரகமுவா மாகாணம்
6.வடமேல் மாகாணம்
7.தென் மாகாணம்
8.ஊவா மாகாணம்
9.மேல் மாகாணம்

அதிக தமிழர்களை கொண்ட பகுதிகளில் ஒன்றாக வட மாகாணம் காணப்படுகிறது. இலங்கை அரச இணையத்தளத்தில் காணப்படும் மாகாணங்களின் பக்கத்தில் 9 மாகாணங்கள் காணப்படுகின்றன அதில் வட மாகாணத்தின் பெயரினை காணவில்லை . வட மாகாணத்தின் பெயருக்கு பதிலாக மேல் மாகாணத்தின் மறு பெயராக மேற்கு மாகாணம் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

https://www.gov.lk/index.php

மேலே குறிப்பிட்ட இணைப்பை அழுத்தி சென்று தமிழினை தெரிவு செய்து  பின்னர் கீழே சென்று மாகாணசபைகள் என்ற சொல்லின் மீது அழுத்தி சென்றால் நீங்களும் பார்வையிட முடியும்.

ஆனால் இதனை ஆங்கிலத்தில் பார்வை இட்டால் சரியாக காணப்படும். தமிழில் மட்டுமே காணப்படவில்லை .
இதற்க்கு காரணம் அரச அதிகாரிகளின் தவறுதலா அல்லது திட்டமிட்ட செயலா ?

எதுவாகினும் இன்னும் எந்த ஒரு அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லாமைக்கான காரணம் என்ன ?