அப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை

அப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை

அப்பிள் நிறுவனம் இதுவரையும் வெளிவந்த ஹெட்போன்களை காட்டிலும் வித்தியாசமானதொரு ஹெட்போனை உருவாக்க காப்புரிமை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் ஓவர் த இயர் ஹெட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் காப்புரிமையின் படி அந்த ஹெட்போன்கள் தானாகவே வலது மற்றும் இடதுபுற காதுகளை கவ்விக்கொள்ளும் எனவும் எதிர்ப்புறமாகத் திருப்பத்தக்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹெட்போன்களில் ஐந்து மைக்ரோபோன்கள் இடம்பெற்று இருக்கும் என்றும் அக்காப்புரிமையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதன் உற்பத்தி தொடர்பில் எந்ததொரு உறுதியான அறிவிப்பையும் அப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.