பேஸ்புக்கில் புதிய மெசஞ்சர் அறிமுகம் !

பல கோடி பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் தற்போது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குகிறது. தற்போதைய பயனாளர்களுக்கு இதன் பயன்பாடு கிடைக்கும் என கருதப்படுகிறது.
ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி பேஸ்புக் நிறுவனம் இந்த செயலியை வழங்கியுள்ளது.
இதன் முக்கியமான பயன் என்னவெனில் குறுந்தகவல் அனுப்பப்பட்ட 10 நிமிடங்களுக்குள் மறுபடி அவற்றை திரும்ப பெறமுடியும்.

அவற்றை திருத்தவும், முழுவதுமாக அழிக்கவும் முடியும். இதை பயன்படுத்தப்பட்டதற்கான ஆப்சன் திரையில் தோன்றும்.

இது பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.