வெளியானது 2.O: பட்டாசு வெடித்து, ஆடி,பாடி ரசிகர்கள் உற்சாகம்!

வெளியானது 2.O: பட்டாசு வெடித்து, ஆடி,பாடி ரசிகர்கள் உற்சாகம்!

ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது.

₹600 கோடி பொருட்செலவில் ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. இந்தியாவில் மட்டும் 7,800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

சென்னை காசி திரையரங்கில் காலை 4.30-க்கு துவங்கிய ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் காலை 3 மணி முதலே திரையரங்க வாசலில் குவிந்தனர்.

இயக்குநர் ஷங்கர், சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி மற்றும் லைகா தயாரிப்பாளர் குடும்பத்தினர் ஆகியோர் சிறப்புக் காட்சியை பார்த்தனர்.

படம் வெளியாகும் முன்பு ரஜினியின் கட்-அவுட்டுகள் முன்பு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

எந்திரன் படத்தை விட பல மடங்கு எதிர்பார்ப்புகளுடன் படம் பார்க்க வந்திருப்பதாகவும், உலக சினிமாவில் 2.0 திரைப்படம் பல விருதுகளையும் பெறும் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.