இறுதிக் கட்டத்தை எட்டியது சூர்யாவின் NGK

சினிமா

இறுதிக் கட்டத்தை எட்டியது சூர்யாவின் NGK

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் NGK திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இடம்பெற்றுவருவதாக, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரசியல் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

ட்ரீம் வாரியஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய்பல்லவி மற்றும் ராகுல் பிரீத்தி சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா மற்றும் சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.