சபாநாயகர் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை!! மைத்திரியின் நிலை?

சபாநாயகர் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை!! மைத்திரியின் நிலை?

நாளை காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில் நாளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் என படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளைய தினம் மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதார நிலைமைகள் வெகுவாக மோசமடையும் நிலைமைக்கு நாட்டின் அரசியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடி நிலைமை மாறி இயல்பு நிலை ஒன்று தோன்றுவதற்கு சனாதிபதி மைத்திரியும் ஏனைய அரசியற் கட்சிகளும் முன்வரவேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அதில் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கேற்ப தன்னால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வதற்கு தயாராகியுள்ளதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.