இராணுவ முகாமில் – விடிய விடிய இசை நிகழ்ச்சி- பிரதேச மக்கள் விசனம்!

வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள இராணுவ முகாமில் விடிய விடிய நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியால்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

குறித்த இராணுவ முகாமில் நேற்று இரவு தொடக்கம் அதிகாலை வரை இராணுவத்தினர் இசை நிகழ்ச்சியை நடாத்தியுள்ளனர்.

அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதேவேளை கா.பொ.த. சாதாரண தர பரீடசை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்குத் தயார் படுத்திய மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்த பிரசேத மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்