யாழில் இராணுவ முகாமுக்குள் நுழைந்த இருவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்.காங்கேசன்துறையிலுள்ள இராணுவ முகாமொன்றுக்குள் உள்நுழைந்து அங்கிருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களைத் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் அதேபகுதியைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றைய தினம்(05) முற்படுத்தப்பட்டனர்

இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும்-10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.