இரணைமடு குளத்தினை பாரியஅபிவிருத்தியின் பின்னர் விவசாயிகளிடம் கைளிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தினை பாரியஅபிவிருத்தியின் பின்னர் விவசாயிகளிடம் கைளிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இன்று ஆராயப்பட்டன.

நாளை முற்பகல் இரணைமடு குளத்தினை மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற வருகின்றன.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பல் இன்று குறித்த பகுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படையினர், நீர்பாசன திணைக்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கு கொண்டனர்.