புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பெயர் பலகை திறப்பு விழா

ஈழம் பாடசாலை

மட்டக்களப்பு, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

வித்தியாலய அதிபர் கே .பாஸ்கரன் தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் சிறப்பு அதிதிகள் பாடசாலைக்கான பெயர் பலகையினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடியேற்றப்பட்டு புதூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ் . சபாரெத்தின குருக்களின் விசேட தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து சமூக சேவையாளரும், வர்த்தகருமான எஸ் .ராஜ்குமாரின் நிதி வழங்களின் கீழ் பாடசாலை நலன்விரும்பிகளின் பங்களிப்புடன் பாடசாலை வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ. சுகுமாரன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதர் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் அதிபர் அருமைத்துரை, விசேட அதிதியாக சமூக சேவையாளரும், வர்த்தகருமான ராஜ்குமார், மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.