இலங்கை மக்களுக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு!

இலங்கையிலுள்ள பலரின் தொலைபேசிகளுக்கு நேற்றைய தினம் அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு (மிஸ்ட்கோல்) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ள நிலையில், அதனை ‘One Ring’ Scam என அழைப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி என்றால் இது குழுவாக இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும். தவறிய இலக்கத்திற்கு மீண்டும் அழைப்பு மேற்கொண்டவுடன் வெளிநாட்டு தொலைபேசி கட்டணம் உட்பட பணம் செலுத்தி பெற்று கொள்ள வேண்டிய பல்வேறு சேவைகள் தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.

அதன் பின்னர் நுட்பமான முறையில் தொலைபேசி கட்டணம் அறவிட்படும். இதில் ஒரு முறைக்கு 20 டொலர் வரையில் அறவிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

எனவே அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் கிடைக்கும் தவறிய அழைப்புகளுக்கு மீண்டும் அழைப்பதனை தவிர்க்குமாறு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.