கடலில் அதிஷ்டம்! செல்வந்த நாடாக மாறும் இலங்கை.

மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வைப்புகளை 2021 ஆண்டில் எரிபொருளாக தாயரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெற்றோலிய ஆய்வு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் போது பெற்ரோலியம் வள மேம்பாட்டு செயலகம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2018 ஆம் ஆண்டில், இயற்கை எரிவாயு வைப்புகளுக்கு உற்பத்தி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும்.

மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வாயு வைப்புகளில் சுமார் 2 மில்லியன் கலன்கள் இயற்கை எரிவாயு மற்றும் 10 மில்லியன் திரவ எரிவாயு பீப்பாய்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.

மன்னார் கடற்படுகையின் 4442 அடி ஆழத்தில் எரிவாயு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எரிவாயு மட்டுமல்லாமல் கனிய எண்ணெய் வளமும் உள்ளமை ஆய்வின் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி மூலம் இலங்கையின் எரிபொருள் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக பல பில்லியன் டொலர்கள் வருடாந்தம் செலவிடப்படுகிறது.

மன்னார் கடற்படுகையில் எரிபொருள் உற்பத்தி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், இலங்கையின் எரிபொருள் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

இதன்மூலம் இலங்கையும் எதிர்காலத்தில் செல்வந்த நாடாகும் வாய்ப்பு உள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.