இந்தியாவின் தேர்தல் முடிவுகளில் மோடியின் பரிதாப நிலை!

இந்தியாவின் தேர்தல் முடிவுகளில் மோடியின் பரிதாப நிலை, ராகுலின் வெற்றி பாதை! இந்தியாவின் சத்தீஸ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசேரம் ஆகிய ஐந்து மாகாணங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத்துக்கான இத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. தெலங்கானாவில் மாநில கட்சியான தெலங்கானா […]

Continue Reading

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி!

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி! உத்தரபிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்துகொண்டு செல்ஃபி எடுத்தவேளை தவறி வீழ்ந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தை சேர்ந்த ராணி (வயது 20) என்பவர், சர்தார் என்னும் இடத்தில் ராட்டினத்தில் சவாரி செய்தார். ராட்டினம் மேல் நோக்கி சுற்றிக்கொண்டிருந்த போது அவர் இருக்கையில் இருந்தபடி கைத்தொலைபேசியில் ‘செல்ஃபி’ படம் எடுக்க முயன்றார். இதில் அவர் நிலைநடுமாறி ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு […]

Continue Reading

பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்!

பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்! தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியமைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தரமணி பொலிஸ் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தரமணியில் 2016 மார்ச் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றியதாக உயர்நீதிமன்ற சட்டத்தரணி ராஜ்குமார் பொலிஸ் ஆணையர் […]

Continue Reading

இளம்பெண்ணின் சடலத்துடன் உடலுறவு: கர்நாடகாவில் கொடூரம்

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று அவரை கொன்று அவரது உடலுடன் உடலுறவு கொண்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர், பணி முடிந்த பின்னர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அந்த பெண்ணிற்கு தெரிந்த வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். பேருந்து நிலையத்தில் அந்த பெண்ணை பார்த்த வாலிபர், தாம் டிராப் செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த வாலிபருடன் பைக்கில் சென்றுள்ளார். சற்று நேரத்தில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு

மு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று புது டெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை […]

Continue Reading

ஜம்மு – காஷ்மீரில் இவ்வாண்டில் மட்டும் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சியொன்றில் இன்று (சனிக்கிழமை) பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் கருத்துக் கூறும்போது ஜம்மு – காஷ்மீரில் இவ்வாண்டில் மட்டும் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார் மேலும் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.“பாகிஸ்தான் இராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு – காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் குறித்து உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு உரிய தகவல் […]

Continue Reading

மனைவியுடன் தகராறு – இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!

மனைவியுடன் தகராறு – இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்! கோவையில் குடும்பத் தகராறு காரணமாக இரு மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாகியுள்ளார். கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராணி- பத்பநாபன் தம்பதியினர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்குள் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து […]

Continue Reading

உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!

உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது பேஸ்புக் பக்கம் மூலம் 4 கோடிக்கும் அதிகமான விருப்பங்களை குவித்திருக்கும் அவர், தனது டுவிட்டர் தளத்தில் 4.3 கோடி பேர் பின்தொடர்பாளர்களையும் கொண்டிருக்கின்றார். இதைப்போல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி தீவிரமாக […]

Continue Reading

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!

அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்! இந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ. ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018ஆம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்துக் […]

Continue Reading

கள்ளக் கணவருடன் மோதல்: குழந்தையை கயிற்றி இறுக்கி கொன்ற தாய்

கரூர் அருகே குடும்ப பிரச்சினைக்காக 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா வயது 24. இவரது மகள் வேத வர்ஷினி வயது 3. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா தனது கள்ளக்காதலன் மணிமாறன் உடன் தொடர்பில் இருந்ததால் கணவனை வெறுத்து […]

Continue Reading

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு! இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கச்சத்தீவு பகுதியில் இன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேசஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (திங்கட்கிழமை) கடலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை இந்திய எல்லையருகிலுள்ள கச்சத்தீவு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி […]

Continue Reading

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புலிகளின் அறிக்கை! இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை!

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புலிகளின் அறிக்கை! இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை! விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தெரிவித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், […]

Continue Reading

இலங்கையின் அரசியல் நெருக்கடி! இந்திய நாடாளுமன்றில் விளக்கம்!

இலங்கையின் அரசியல் நெருக்கடி! இந்திய நாடாளுமன்றில் விளக்கம்! இலங்கையின் அரசியல் குழப்ப நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்திய நாடாளுமன்ற நிலையியல் குழுவிடம் விளக்கமளிக்கவுள்ளனர். இந்தக்குழு காங்கிரஸ் தலைவர் ராஹூல் காந்தியின் தலைமையில் இயங்கி வருகிறது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை, இதன் காரணமாக இலங்கை இந்திய உறவில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை, இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தீர்வுக்காக ஏதாவது திட்டங்களை முன்வைத்துள்ளதா? இதன் பங்களிப்பு என்ன? இந்தநிலையில் சீனாவின் தலையீடுகள் […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை!

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. இதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் […]

Continue Reading

மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு!

மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு! சபரிமலையில் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளம் பெண் பக்தர்கள் நேற்று (சனிக்கிழமை) நுழையமுற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சபரிமலைக்கு வரும் […]

Continue Reading

இலங்கை அகதிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை!

இலங்கை அகதிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை! யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த மக்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அவர்களை புறக்கணித்து வருவதாக நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை, தோப்புக்கொல்லை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு நிவாரண பொருட்களை நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைத்தார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “25 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து அகதியாக […]

Continue Reading

டெல்டாவுக்கு வழிய காணோம், இதுல நினைவு ஊர்வலத்துக்கு பிளானிங்… என்ன அரசோ இது?

கஜா புயல் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கரையை கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை. மக்கள் இன்னும் பாதிப்புகளை இருந்து மீளாததற்கு தமிழக அரசின் மெத்தன போக்குதான் காரணம் என பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆளும் அதிமுக அரசை விமர்சித்து வருகின்றனர். ஆனால், அதிமுக அரசு இதை கண்டுக்கொள்ளாமல் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் வருகிற […]

Continue Reading

கணக்கு டீச்சரை கடத்திட்டு போன மர்ம நபர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு

கும்பகோணத்தில் கணக்கு டீச்சரை மர்ம அந்பர்கள் கடத்திக் கொண்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவர் கணக்கு டீச்சர் ஆவார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின்னர் இருசக்கர வானத்தில் வீட்டிற்கு சென்ற காயத்ரியை காரில் வழிமறித்த கும்பல் அவரை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் காயத்ரியை கடத்திச் சென்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்!

வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்! கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வரலாற்று சரித்திரமாக பதிவாகியுள்ளது. வருடா வருடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக பிரம்மாண்டமான முறையிலும் பேரெழுச்சியுடனும் இந்த மாவீரர் தின நிகழ்வு […]

Continue Reading

விபச்சார தொழிலுக்கு உதவிய ஏட்டு : அதிரவைக்கும் தகவல்

சில நாட்களுக்கு முன்பு நடந்த விபச்சார பெண்ணுக்கு உதவியதாக ஏட்டு பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல தகவல்கள் வெளிவருகின்றனர். அதில் முக்கியமாக ஜெயந்தி என்பவர் விபச்சாரம் செய்வதற்கு வீடு எடுத்துக்கொடுத்து வருமானம் பார்த்துள்ளார் ஏட்டு பார்த்திபன். மேலும் ஜெயந்தியின் பரிதாப நிலையை கணக்கில் கொண்டுதான் பார்த்திபன் அவருக்கு உதவி செய்திருக்கிறார். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னெவென்றால் ஜெயந்தி பாலியல் தொழில் கிராக்கி செய்ய.. ஏட்டு பார்த்திபனும் சிலரை மிரட்டி பணம் வசூழ் […]

Continue Reading

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய்!

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய் – விசாரணையில் அம்பலமான கொடூரச் செயல்! காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த சத்யராஜ். கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி செலஸ்டின் (வயது 23). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 1½ வயதில் நிஷாந்தி […]

Continue Reading

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக ஆளுநரிடம், நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், நளினி, சாந்தன் உட்பட ஏழு பேரும் சிறை சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து டுவிட்டரில் #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக்கின் கீழ், […]

Continue Reading

பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட இருவர் கைது.

பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட இருவர் கைது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு மும்பை – முளுந் சந்தியில் உள்ள மெஹுல் வட்டாரத்தில் குறித்த இருவரும் பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான மதியழகன் சுந்தரம் மற்றும் 24 […]

Continue Reading

இந்தியா, பிரித்தானியரிடம் இழந்த சொத்து மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய்!

இந்தியா, பிரித்தானியரிடம் இழந்த சொத்து மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய் – அதிரவைக்கும் அறிக்கை! இந்தியாவை ஆட்சிசெய்த காலமான 1858- 1947 வரையான 173 ஆண்டுளில் பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற சொத்துக்களின் மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய் என அறிக்கை சொல்கிறது. இந்திய பொருளாதார நிபுணர் உஸ்தா பட்நாயக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இந்த வரலாற்றுப் பின்னணியைப் பதிவு செய்துள்ளது. பிரித்தானியரின் காலனி ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில், நிதிப் பரிவர்த்தனை குறித்து, மிக ஆழமான ஆராய்ச்சியை உஸ்தா பட்நாயக் […]

Continue Reading

கஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா!

கஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா! கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக 10 கோடி ருபாய் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் தமது டுவிட்டரில், “கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். […]

Continue Reading

புயல் வருது புயல் வருது… அதிமுகவை கலாய்த்த செந்தில் பாலாஜி

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகின்றதே தவிர நிவாரணப்பணிகளில் அரசு மெத்தன போக்கினை காண்பிக்கின்றது என கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களுக்கு நிவாரணப்பணிகளை அனுப்பும் பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாய்கள், 5 கிலோ அரிசி சுமார் 5 ஆயிரம் பேக்குகள், வேஷ்டி, சட்டை, தண்ணீர் பாட்டில்கள் என்று சுமார் 7 லட்சம் […]

Continue Reading

ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் காட்சி உண்மையானதா?

ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் காட்சி உண்மையானதா? – மீண்டும் குழப்பம் அப்பல்லோ வைத்தியசாலை ஊழியரின் வாக்குமூலத்தால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் வீடியோ காட்சி உண்மையானதா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அப்பல்லோ வைத்தியசாலையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு வைத்தியர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு தொழில்நுட்பவியலாளர் யுவஸ்ரீ, தீவிர […]

Continue Reading

சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் – 200 ஆசிரியர்கள் கைது!

சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் – 200 ஆசிரியர்கள் கைது! சேப்பாக்கத்தில் அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் […]

Continue Reading

மதுவால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை!

மதுவால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை! நாகையில் குடிக்க பணம் தராமறுத்ததால் தந்தை செய்த வேலையில் அவரது 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் எனும் இடத்திவ் ரமேஷ் என்பவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் மனைவியிடம் சண்டையிட்டு பணத்தை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதும், தன்னிடம் பணமில்லை என அவரது […]

Continue Reading

காஷ்மீரில் கடும் மோதல்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் கடும் மோதல்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! ஜம்மு – காஷ்மீரில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டம் ஹிபுரா படாகன்ட் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து […]

Continue Reading

பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா!

பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா! பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக அமைக்கப்படும் புதிய வீதிக்கான தொடக்க விழாவிற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் பணி உள்ளதைக் காரணம் காட்டி இந்த அழைப்பை சுஷ்மா நிராகரித்துள்ளார். […]

Continue Reading

டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை!

டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றக்கிழமை) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்தவரை […]

Continue Reading

போட்டி போட்டு ’கஜானாவை காலி செய்யும் மாநில அரசுகள்….

வல்லபாய் பட்டேலின் சிலைதான் உலக்திலேயே உயரமான சிலையாக (182மீட்டர் )உள்ளது. இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை( நிச்சயமாக வெளிநாட்டினரின் கண் இல்லை. அவர்களுக்கு அவர்கள் வேலையை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது)இப்போது பட்டேலின் சிலையை விட உயரமான சிலையை கட்டுவோம் என பலமாநில அரசுகள் போட்டா போட்டி போட்டு கோதாவில் இறங்கியுள்ளனர். இந்தப்போட்டியில் இறங்கியுள்ளது நம் இந்திய ஒட்டுறவான மாநில அரசுகள் தான். குறிப்பாக அயோத்தியில் 201 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கவேண்டும் என உத்தரப்பிரதேச […]

Continue Reading

‘கஜா’ புயல் பாதிப்பு: முதலமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை!

‘கஜா’ புயல் பாதிப்பு: முதலமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை! கஜா புயல் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள மத்திய குழு உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். குறித்த சந்திப்பையடுத்து அவர்கள் தலைமைச் செயலாளருடனும் ஆலோசனையில் ஈடுபட்டனர். கஜா புயலினால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன. இதில் பலர் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோர், வீடுகள், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில், […]

Continue Reading

கர்நாடகா பேருந்து விபத்து உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

கர்நாடகா பேருந்து விபத்து உயிரிழப்பு 25 ஆக உயர்வு! கர்நாடகா, மாண்டியா மாவட்டத்திலேயே இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகளை ஏற்றவந்த குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிருந்த கால்வாயினுள் கவிழ்ந்தது. இதன்போது சிலர் நீந்திக் கரையைக் கடந்தபோதும் பேருந்துக்குள் அகப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து பயணிகளை மீட்டுவருகின்றனர். மீட்கப்பட்ட சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பாதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவ்விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து […]

Continue Reading

தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை! தமிழகத்தில் 7 புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் தினத்திற்குள் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நேற்று சீர்காழி அருகே கரையைக் கடந்து தற்போது தெற்கு கர்நாடகா […]

Continue Reading

அயோத்தியில் பேரணி – 144 தடையுத்தரவு பிறப்பிப்பு!

அயோத்தியில் பேரணி – 144 தடையுத்தரவு பிறப்பிப்பு! அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அயோத்தியை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். பா.ஜ.காவின் அறிவிப்பின் படி பிரதமர் மோடி தலமையில் அயோத்தியில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணிகளில் ஏற்பட்ட காலதாமதத்தால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. […]

Continue Reading

கனமழை: தமிழக பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை: தமிழக பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை! கனமழை காரணமாக திருச்சி, தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ,தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொடர் […]

Continue Reading

அந்தமான் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க காரணம் என்ன…?

அந்தமானில் உள்ள மிகப்பழமையான தீவு சாண்டினல் ஆகும். இங்குள்ள பூர்வ ஆதிவாசி குடிகளுக்கு கிருஸ்துவின் போதனையை பரப்புவதற்காகச் சென்ற அமெரிக்க போதகர் ஜான் என்பவரை அங்குள்ள இனப்பற்றுள்ள ஆதிவாசிகள் அவரை கொன்று உள்ளதாக இரண்டு நாட்களுக்கு பின் தகவல் வந்தது. இந்நிலையில் திகைக்க வைக்கும் புதிய மர்மங்கள் கிருஸ்தவரைக் கொன்ற ஆதிவாசிகளைப் பற்றி வருகின்றன. சாண்டினல் தீவில் ஆயிரம் ஆண்டுகளாக ஆதிவாசிகள் வாழ்கின்றனர். தம் இனம் அல்லாத வேறு யார் இந்த தீவில் கால் வைத்தாலும் அடுத்த […]

Continue Reading

அந்தமான் தீவிற்கு சென்ற இளைஞன் கொல்லப்படட சம்பவம் – திடுக்கிடும் தகவல்

அந்தமானில் உள்ள சாண்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்க இளைஞர் மீது அம்பு எய்தி கொலை செய்த பழங்குடியினர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கருத்த தேகம், கைகளில் வில் அம்பு, கொடூர முகத்துடன் இருப்பவர்கள் சாண்டினல் பழங்குடியினர். கற்கால நாகரீகத்தின் எச்சமாக இன்றும் அந்தமானின் வடக்கே உள்ள சாண்டினல் தீவில், இவர்கள் வசித்து வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள், உலகின் அதிபயங்கர பழங்குடினர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். காரணம், செண்டினல் தீவில் […]

Continue Reading