தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் தமிழ் வீரரின் மறைவு.

தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் தமிழ் வீரரின் மறைவு. ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. 14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது […]

Continue Reading

ஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை சுமந்து நிற்கும் மரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு சுமந்து 2012 ஆண்டு ஜெர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அப்பிள் மரமொன்று நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில உறவுகள் இந்த மரத்தை பார்வையிட்டு வணக்கம் செலுத்தியுள்ளனர். குறித்த மரத்தில் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது […]

Continue Reading

5ஆவது நாளாக ஜெர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்

தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்று கொள்ளும் வகையில் ஜெர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5ஆவது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து. இதன்போது அங்குள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று, கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனித நேய பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று மாலை எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு, இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று […]

Continue Reading

ஜெர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தினம்

உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாதைகளை தாங்கியவண்ணம், ஜெர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பல்லின சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், ஒரு சில நகரங்களில் தாயக உறவுகளின் வாழ்வாதாரத்துக்காக தமிழீழ […]

Continue Reading

செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும் அதிகமான ஒளியை உமிழும் 147 பல்புகளை ஒரே நேரத்தில் ஒளிர வைத்து அதன் வெப்பத்தை கணக்கிட்டுள்ளனர். அது பூமியில் பகல் நேரத்தில் விழும் சூரியனின் ஒளியை விட […]

Continue Reading

ஜேர்மன் விமான விபத்தில் 150 பேர் பலி : புதிய தகவல்

ஜேர்மன் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியானது தொடர்பாக துணை விமானியின் தந்தை முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்ஸ் என்ற பயணிகள் விமானம் கடந்த 2015-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளானது. உலகையே அதிர வைத்த இந்த விபத்திற்கு துணை விமானியான 27 வயதான ஆண்ட்ரியா லூபிட்ஸ் தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிவு பெற்றது. […]

Continue Reading

ஜெர்மன் இந்துக் கோவில் கோபுரத்திற்குள் ஆணின் சடலம்

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர். இது குறித்து வெளியான தகவலின்படி, ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் நேற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டனர். இதேவேளை […]

Continue Reading

ஜேர்மனி – வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணிநிறைவுப் பெருவிழா

ஜேர்மனி – வூப்பெற்றால் தமிழாலயத்தில் 23 ஆண்டுகள் தமது நகரத்தில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்த நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணி நிறைவு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜேர்மனி – வூற்றுப்பெற்றால் நகரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த விழாவினை அந்த நகரத்தின் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களாகப் பணியாற்றும் பீற்றர், ஜேயா மற்றும் ஞானம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்ததுடன், இதன்போது பெற்றோர், ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், நகரிலுள்ள தமிழ் உறவுகளெனப் பலரும் இதில் […]

Continue Reading

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”!

தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.யேர்மனியில் முதன்முதலாக தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் திரையிடப்படுகின்றது.ஏனைய நகரங்களிலும் விரைவில் திரையிடப்படும். தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Continue Reading

“எழு ஒளி வீசு இறை இரக்கத்தின் மனிதனாக ஊதயமாகு” எனும் மைய பொருளுக்கு அமைய நத்தார் விழா

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழைந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் பெற்றோர்களின் மனதினில் ஆழமாக பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 100 க்கும் மேலாக பங்குபற்றிய மாணவர்களுக்கு ஆசிரியர்களால் நத்தார் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு , கிரிஸ்மஸ் தாத்தா குழந்தைகளுக்கான இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்.

Continue Reading

யேர்மனியில் தூங்கிய நபரை கொழுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது!

கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த அந்த நபர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்ட பிறகு, உடனடியாக ஆறு சந்தேக நபர்கள் போலீசாரிடம் சரணடைந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பினார். […]

Continue Reading

முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர்!

முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கருத்துச் சுதந்திரம் என்பது வதந்திகளையும், சேறு பூசல்களையும் நியாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தண்டனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென […]

Continue Reading

யேர்மனி பேர்லின் நகரில் குண்டு தாக்குதல் 9பேர் பலி !

ஒரு லாரி ஒன்பது பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமுற்றனர் மத்திய பேர்லினில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை உழுவ, யேர்மனி காவல்துறை தகவல் தெரிவித்தனர் . யேர்மனி காவல்துறை இப்போது அவர்கள் அதை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இருந்தது சந்தேகிப்பதாக. காட்சியில் இருந்து வீடியோ காட்சிகள் கூடங்கள் மீது தட்டி மற்றும் மக்கள் தரையில் காயம் காட்டுகிறது. இயக்கி ரன் ஜெர்மன் ஊடக அறிக்கை உள்ளது. சந்தை Kurfuerstendamm, நகரின் மேற்கில் பிரதான கடைத்தெரு செல்லும் […]

Continue Reading

60,000 அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப அரசு அதிரடி முடிவு!!

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது கட்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, ‘ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட 60,000 பேரை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 40,000 பேரை பலவந்தமாக நாடுகடத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். […]

Continue Reading