பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது! கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட முகாமையாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்பத் துறை மற்றும் தேடுபொறி துறையில் கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான் சுந்தர் பிச்சை எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக […]

Continue Reading

ஏலத்திற்கு வரும் அரிய விண்கல்!

ஏலத்திற்கு வரும் அரிய விண்கல்! அமெரிக்காவின் பொஸ்டன் (Boston) நகரிலுள்ள ஏல நிறுவனம் ஒன்றினால் விற்பனைக்குவரும் இந்தவிண்கல் இதுவரை ஏலத்துக்கு விடப்பட்ட நிலவின் பாகங்களில் மிகப்பெரியதாகும். 5.5kg (12lb) எடையுள்ள இந்தவிண்கல் Mauritania எனும் இடத்தில் சென்றஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்திருக்கமுடியுமென கருதப்படுகிறது. அதன் மிகவும் அசாதாரணமான பெரியஅளவு மற்றும் அமைப்பு காரணமாக ஏலத்தில் விற்பனைக்கு வரும்போது அது சுமார் $ 500,000 (£ 380,000) ஈட்டமுடியுமென நம்பப்படுகிறது.

Continue Reading

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் தமிழர் மீது தாக்குதல்!

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் தமிழர் மீது தாக்குதல்! அமெரிக்க செனட் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யத்துரை மீது இனவாத சொற்களை கூறி தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் சிவகாசியை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யத்துரை. தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்ற அய்யாத்துரை, சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், அங்கு தற்போது முன்னனி தொழில் முனைவராக உள்ளார். இ-மெயில் அனுப்பும் […]

Continue Reading

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி!

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி! அமெரிக்காவில் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் திடீரென துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற நிலையில், அங்கிருந்து மாணவர்கள் வெளியில் ஓடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் […]

Continue Reading

அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்!

மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பொப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி கடந்த புதன் நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 59-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் […]

Continue Reading

அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசவை

அகவை எட்டினைக் காணும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவையின் நேரடி அமர்வினை உணர்வெழுச்சியுடன் அமெரிக்காவில் கூடவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுக்க இருப்பதோடு, பல அறிஞர்களும் பங்கு பற்றவுள்ளனர். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை மே மாதம் 18ஆம் திகதியும் […]

Continue Reading

ஏன் தோல்வியடைந்தேன்? – முதன்முறையாக மனம் திறந்த ஹிலாரி கிளின்டன்!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. பலர் களத்தில் இருந்தாலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்புக்கும் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளின்டனுக்கும் இடையேதான் தீவிரமான போட்டி நிலவியது. ட்ரம்ப், தனது பிரசாரங்களின் மூலம் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும், அகதிகளுக்கு எதிராகவும், கறுப்பின மக்களுக்கு எதிராகவும் வெறுப்பை கக்கும் பேச்சை மேடைகளில் உதிர்த்து வந்தார். பல பத்திரிகைகளால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் […]

Continue Reading

டொனால்ட் ட்ரம்ப்! 100 நாட்களில் 488 சொதப்பல்கள்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன் என்று பன்ச் டயலாக்குடன் அதிபரான ட்ரம்ப் முதல் நூறு நாட்களில் செய்தது என்ன? பதவியேற்பு விழாவுக்கு கூட்டம் வராதது துவங்கி ஆன்லைனில் ஆங்க்ரி எமோஜி பறந்தது வரை எல்லாமே எதிர்ப்பலைகள் தான். சிரியா உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததால் ஆஸ்கர் மேடையில் ட்ரம்ப் சந்தித்த அவமானம், இதே காரணத்துக்காக சிலிக்கான் வேலி சிஇஓக்கள் சீறி எழுந்தது […]

Continue Reading

அமெரிக்காவில் பலத்த சூறாவளி – 16 பேர் பலி

அமெரிக்க மாகாணங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகியவற்றில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த மழையும் கொட்டியது. மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் காற்று சுழன்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகள் மற்றும் கார்களின் மீது விழுந்தன. பல இடங்களில் கன மழையால் வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது.  3 முறை பலத்த சூறாவளி காற்று வீசியதை […]

Continue Reading

மே தின பேரணிகளின் போது ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் நடத்தப்பட்ட மே தின பேரணிகளின் போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் வகுக்கப்பட்ட பல கொள்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை) மே தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட மே தின பேரணிகளின் போது குறிப்பாக ட்ரம்பின் குடியேற்றம் தொடர்பான கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கறுப்பு நிற ஆடையணிந்திருந்த சிலர் வீதிகளில் தீவைத்தும், ஜன்னல்களை கல்லெறிந்து உடைத்தும் பொலிஸாரின் வாகனங்கள் மீது பொருட்களை எறிந்தும் தங்களது எதிர்ப்பை […]

Continue Reading

H1B விசா நிறுவனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

H1B விசாக்களில் இடம்பெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. H1B விசா திட்டமானது அமெரிக்காவில் திறமையான ஊழியர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருவதற்காக கொண்டுவரப்பட்ட விசா நடைமுறையாகும். எனினும், அமெரிக்காவில் தகுதியான ஊழியர்கள் இருக்கின்ற போதிலும், H1B விசாவை முறைகோடாக பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க குடிவரவு குடியகல்வுத்திணைக்களம் கடும் […]

Continue Reading

அமெரிக்காவில் இலங்கை நபரை தேடிச் செல்லும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் உணவகத்தினை பெருமைப்படுத்தி அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டெடன் தீவு Staten Island எனப்படும் பகுதியில் இலங்கையரான சன்ஜய் ஹன்டபன்கொட, சன்ரச எனும் பெயரில் உணவகம் ஒன்றினை நடாத்தி வருகின்றார். குறித்த பகுதியில் 8 ஆயிரம் தொடக்கம் 9 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இலங்கையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இவரது உணவகம் தற்போது பிரபல்யமடைந்துள்ளது. இவர் இலங்கை உணவு வகைகளை தயார் செய்து கொண்டு வருகின்றார். அதனால் […]

Continue Reading

கலிபோர்னியா பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சன் பெர்டினாடினோ நகரிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) குறித்த பாடசாலையின் வகுப்பறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் ஆசிரியை உயிரிழந்ததுடன், இரு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த […]

Continue Reading

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ஸ்டெல்லா : ஆளில்லா விமானம் மூலம் அழிக்க ட்ரம்ப் உத்தரவு..!

தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனுக்கு விஜயம் மேற்கொண்டு இது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அதன்படி, வெள்ளை மாளிகையின் அனுமதியின்றி மத்திய புலனாய்வு துறை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் வகையில் கொள்ளையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் […]

Continue Reading

ட்ரம்பின் வருமானவரி விபரங்களை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2005ஆம் ஆண்டு அரசுக்கு செலுத்திய வருமானவரி விபரங்களை இரண்டு பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், கடந்த 2005ஆம் ஆண்டு 150 மில்லியன் டொலர்களுக்கும் மேலான தனது வருமானத்தின் மீது  கூடுதல் வருமான வரியாக 38 மில்லியன் டொலர்களையும், மத்திய வருமான வரியாக 5.3 மில்லியன் டொலர்களையும் ட்ரம்ப் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் வரிமான வரி விபரங்களின் ஒருபகுதியாக அமைந்திருந்த குறித்த அறிக்கையில் […]

Continue Reading

இந்தியர்களுக்கு ‘டிரம்ப்’ அளித்த முதல் மகிழ்ச்சி தரும் செய்தி..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக இது அமையும். தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு தனிநபரின் பணிபுரிந்த வரலாறு மற்றும் படிப்பு சான்றுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த மசோதா பற்றி ஆராய்ந்து […]

Continue Reading

அமெரிக்க பட்ஜெட்டில்ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.3.67 லட்சம் கோடி ஒதுக்க திட்டம்!

அமெரிக்க பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ. 3.67 லட்சம் கோடி) ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ.3.67 லட்சம் கோடி) ஒதுக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிகாரபூர்வ அறிவிப்பு அதிபர் டிரம்ப்பின் நாடாளுமன்ற உரையில் வெளியாகும் என்றார் அவர். முன்னதாக, அமெரிக்க மாகாண ஆளுநர்கள் சங்க மாநாடு அதிபர் டிரம்ப் தலைமையில் […]

Continue Reading

அமெரிக்க கடற்படை பதவியை ஏற்க மறுத்த பிலிப் பில்டன்..!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் பல்வேறு நிர்வாக பதவிகளுக்கு புதிய நபர்களை நியமித்து வருகிறார். அதன்படி கடற்படையின் புதிய செயலாளராக, அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரிகளும், தனியார் பங்கு நிர்வாகியுமான பிலிப் பில்டன் என்பவரை அவர் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து கடற்படை செயலாளர் பதவிக்கு பிலிப் பில்டனை முறையாக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவர் அந்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்து உள்ளார். […]

Continue Reading

7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை!

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். அது அமெரிக்க மக்கள் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஜனாதிபதியின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது. இந்நிலையில், இன்று டிரம்ப் கூறுகையில், அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை நீதிமன்றத்தின் […]

Continue Reading

அமெரிக்காவில் அதிபரின் மூத்த ஆலோசகராக டிரம்ப் மருமகனுக்கு பதவி!

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 20ம் தேதி பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அரசின் மூத்த ஆலோசகராக தனது மருமகன் ஜேர்ட் குஷ்னரை (35) நியமித்து டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார். குஷ்னர், டிரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஆவார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹாட் லைன்வசதி தொடரும்இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நேரடியாக பேச வசதியாக கடந்த […]

Continue Reading

தகவல் தொழில் நுட்பத்துறையினரின் வரவேற்பை பெற்ற அமெரிக்காவின் ‘எச்-1பி விசா’ நடைமுறையில் மாற்றங்களா?

தகவல் தொழில் நுட்பத்துறையினரின் வரவேற்பை பெற்ற அமெரிக்காவின் ‘எச்-1 பி’ விசா நடைமுறைகளில் மாற்றங்கள் செய்ய வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘எச்-1 பி’ விசா அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசாக்களை வழங்கி வருகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில் […]

Continue Reading

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவி ஏற்பு!

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்தியர்கள் 5 பேர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்கள். செனட் சபைக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தமிழ்ப்பெண் கமலா ஹாரீஸ் (வயது 52) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே போன்று பிரதிநிதிகள் சபைக்கு சென்னையில் பிறந்த பெண் பிரமிளா ஜெயபால் (51), வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து தேர்வு பெற்றார். சென்னையை பூர்வீகமாக […]

Continue Reading

டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கும் மைத்திரி!

மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கு ஏதுவான சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு முன்னர் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இரண்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள மைக் ஹெஜ்ஸ்ரு ஒழுங்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இலங்கைக்கு எதிரான […]

Continue Reading

அதிரடி காட்டிய ஒபாமா 72 மணி நேர காலக்கெடு அதிர்ச்சியில் ரஸ்யா

ரஷ்ய நாட்டை சேர்ந்த 35 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதுடன், குறித்த அனைவரையும் 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் இணையவழி மோசடிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது […]

Continue Reading

புதிய அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை எதிரொலி: முஸ்லிம் தகவல் பதிவை அழிக்க முடிவு

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்பின் அச்சுறுத்தலால் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்பதிவை அழித்துவிட தற்போதைய அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். கடந்த 2001 செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ‘தேசிய வருகை பதிவேடு’ திட்டத்தை அமெரிக்க அரசு அமல் படுத்தியது. அதன்படி முஸ்லிம் கள் பெரும்பான்மையாக வசிக்கும் இராக், ஈரான், சூடான், சிரியா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள் உன்னிப்பாகக் கண் காணிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பாக […]

Continue Reading

ஹிலாரிகிளின்டன்  மீண்டும் ஐனாதிபதியாக ஓர்அரிய சந்தர்ப்பம்

 America ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை விட அதிகளவு மக்கள் வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்திருந்தாலும் வாக்குகள் அடிப்படையில் டிரம்பை விட 2.5 மில்லியன் வாக்குகள் கூடுதலாக ஹிலாரி பெற்றுள்ளார். ஆனால், மாகாண ரீதியான வாக்களிக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி […]

Continue Reading

ஆசிட் குளத்தில் விழுந்த நபரின் உடல் கரைந்த பரிதாபம்!

அமெரிக்காவில் உள்ள காலின் ஸ்காட் என்ற நபர் தன்னுடைஅய சகோதரியுடன் யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவிற்குச் என்று உள்ளார். அங்கு உள்ள அமிலத்தன்மை மிக்க வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்று குனிந்து முயற்சிக்கையில், அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது. […]

Continue Reading

அதிபர் ஒபாமா தங்குவதற்கான புதிய வீடு தயாராகி விட்டது!!!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின் ஒபாமா தங்க இருக்கும் வீடு அவரது வருகைக்காக காத்திருக்கிறது. வெள்ளை மாளிகையில் உள்ள வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டின் உள் அலங்காரங்கள் கண்களை கவரும் வகையில் உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்பவர் பதவிக்காலம் முடியும் வரை வெள்ளை மாளிகையில் தங்க வைக்கப்படுவர். இதையடுத்து வெள்ளை மாளிகையில் வசிக்கும் முன்னாள் அதிபருக்கு அந்நாட்டு அரசு புதிய வீடு வழங்குவது வழக்கம். இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க […]

Continue Reading

அமெரிக்காவில் குடியேறியுள்ள 30 லட்சம் பேரை வெளியேற்றுவேன்! ட்ரம்ப் அதிரடி –

  சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார், மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும் இவர் 2017 ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ட்ரம்ப் […]

Continue Reading

அமெரிக்காவின் அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்!

  அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன. அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் ஹிலாரிக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்து வந்தார். இதனால் ஹிலாரியே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கருத்துக்கணிப்புக்கள் […]

Continue Reading