ஏலத்திற்கு வரும் அரிய விண்கல்!

ஏலத்திற்கு வரும் அரிய விண்கல்!

அமெரிக்காவின் பொஸ்டன் (Boston) நகரிலுள்ள ஏல நிறுவனம் ஒன்றினால் விற்பனைக்குவரும் இந்தவிண்கல் இதுவரை ஏலத்துக்கு விடப்பட்ட நிலவின் பாகங்களில் மிகப்பெரியதாகும்.

5.5kg (12lb) எடையுள்ள இந்தவிண்கல் Mauritania எனும் இடத்தில் சென்றஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்திருக்கமுடியுமென கருதப்படுகிறது.

அதன் மிகவும் அசாதாரணமான பெரியஅளவு மற்றும் அமைப்பு காரணமாக ஏலத்தில் விற்பனைக்கு வரும்போது அது சுமார் $ 500,000 (£ 380,000) ஈட்டமுடியுமென நம்பப்படுகிறது.