கனடாவில் தீவிபத்து ! ஒருவர் பலி!

கனடாவில் தீவிபத்து ! ஒருவர் பலி!

கனடாவின் சஸ்கடூனில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தீயனைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஸ்ரீட் வெஸ்ட் பகுதியில் மாடிக்கட்டிடத் தொகுதியொன்றில் தீப்பற்றியுள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) மாலை அவசர உதவிகள் சேவைப்பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைப்பேசி ஊடான தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த கட்டிடத்தொகுதிக்கு அடித்தளத்தில் சடலமொன்றை மீட்டுள்ளனர்.

குறித்த உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள், இதுவரை பொலிஸாரால் வெளிப்படுத்தப்படவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், குறித்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.