உள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

உள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

ஒன்ராறியோவில் கடந்த 22 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், சீராக வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற தொகுதிகளில், ரொறன்ரோ மற்றும் பிரம்டன் தவிர, மற்றைய உள்ளூராட்சி மன்றங்களிலும் புதிதாக சிலர் தெரிவாகியுள்ளதுடன், மேலும் சிலர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் BARRIE மேயராக முன்னைய மேயர் ஜெஃப் லேமன் இரண்டாவது தடவையாக மீண்டும் தெரிவாகியுள்ளார்.

ஹமில்ட்டன் மேயராக முன்னைய மேயர் ஃபிரட் ஐசென்பேர்கர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல மார்க்கம் மேயராக ஃபிராங் ஸ்கார்பெட்ரி மீண்டும் மூன்றாவது தடவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், மேயர் போனி குரொம்பி மீண்டும் தெரிவாகியுள்ளார்.