பாதையை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்த பஸ்!

மொனராகலையிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று மூதூர் பச்சை நூல் பகுதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளையில், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக பஸ் வயல் வெளிக்குள் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பயணிகள் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.