சீரற்ற காலநிலையால் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

ஊடக அறிக்கை
09.11.2018

சீரற்ற காலநிலையால் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வருடாந்த விசேடபொதுக் குழு கூட்டம் 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக சகல பொதுக்குழு உறுப்பினர்களுக்கும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக,
அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அனேகமான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள எமது பொதுக்குழு
உறுப்பினர்களின் போக்குவரத்து சிரமங்களை கவனத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

விரைவில் கூட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும்.

வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி