இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு! பிரித்தானியா வலியுறுத்தியுள்ள விடயம்!

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியா ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும்,

நாடாளுமன்றம் மீளவும் கூட்டப்படுவதற்கு முன்னதாக இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நட்பு நாடு என்ற ரீதியில் அனைத்து தரப்பினரும் அரசியல் அமைப்பிற்கும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.