குடிப்பவர்களுக்கு மரணம் விரைவில் நெருங்காது என, ஆராய்ச்சியொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு மதுகுடிப்போருக்கு, இளம் வயதில் உயிரிழப்பு அபாயம் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென, குறித்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக PLOS என்ற பிரபலமான மருத்துவப் பத்திரிகையில் வெளியான கட்டுரையில், குறைவான அளவு மதுகுடித்தால், இளம் வயதில் உயிரிழப்பு அபாயம் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மது குடிக்காதவர்களை விட, குறைந்த அளவில் மது குடிப்போருக்கு, அதிக உடல் ஆரோக்கியம் கிடைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.