விமானத்தில் தகராறு செய்த இந்தியருக்கு சிறை!

இங்கிலாந்தில் பணியாற்றி வந்த கிரண்ஜெதேவ். இவர் இந்தியராவார். இவர் ஸ்பெயினில் டெனரிப் விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லேண்ட் க்கு கடந்த ஜனவரியில் பயணம் செய்தார்.
அவர் பயணித்தது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில். அவர் விமானத்தில் செல்லும் போது மது அருந்தினார். பணிப்பெண்கள் கொடுத்த மது போதாமல் திரும்பவும் மது கேட்டு சப்தம் போட்டார். அதனால் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணிக்கு வலிப்பு வந்தது. இந்நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து கிரண் மீது வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் விமானத்தில் சக பயணியின் தொந்தாவு விளைவித்தது தொடர்பாக கிரணுக்கு 6 மாதம் தண்டனை அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.