சரத் பொன்சேகாவையும் ஏற்க மாட்டேன்!

சரத் பொன்சேகாவையும் ஏற்க மாட்டேன்!

என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும். சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா? இல்லை ஏற்கவே மாட்டேன். அப்படிதான் ரணிலையும் ஏற்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தை கலைப்பது பற்றி நான் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்கவில்லை.

எனது சட்ட வல்லுனர்களிடமே கேட்டேன். பாராளுமன்ற கலைப்பு பற்றி மூன்று விதந்துரைகள் உள்ளன. நான்கரை வருடங்களுக்கு பின்னர் கலைக்கலாம் என்பது அதில் ஒன்று.

என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும்.. சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா ? இல்லை ஏற்கவே மாட்டேன்.. அப்படிதான் ரணிலையும் ஏற்க முடியாது..