வட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி!

வட சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடிப்பு: 22 பேர் பலி!

வட சீனாவில் இரசாயன தொழிற்சாலை ஒன்றிற்கு அருகே இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப்பரவலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) அதிகாலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் சிக்கி 22 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 50 பெரிய மற்றும் சிறிய வகையிலான டிரக் வண்டிகள் தீக்கிரையாகியுள்ளதாக உள்ளூர் பிரசாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனர்த்தத்தில்; இரசாயன தொழிற்சாலை சேதமாக்கப்பட்டதா அல்லது குறித்த அனர்த்தம் வீதியில் இடம்பெற்றதா என்பது தொடர்பாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வட சீன பிராந்தியத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.