யாழ் சுவரொட்டிகளில் சபாநாயகர்!

யாழ் சுவரொட்டிகளில் சபாநாயகர்!

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் சபாநாயகரின் புகைப்படத்தையும் “எமக்கும் பெருமை நாட்டிற்கும் பெருமை” என்ற வாசகங்களை தாங்கியுள்ளன.

பாராளுமன்றின் சம்பிரதாயங்கள் அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளை துனிகரமாக பாதுகாத்ததுடன் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய மேன்மை தாங்கிய சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் எனவும் குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.