‘2.0’ தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு!

‘2.0’ தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு!

லைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள ‘2.0’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

உலக அளவில் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரை நட்சத்திரங்களும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான விவேக் இன்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பதிவில் 2.0 படத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், “தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு..! 2.0 புதிய இலக்கு தொட்டு உச்சபட்ச வெற்றி அடையட்டும். அதுவே பேருழைப்புக்குக் கிடைக்கும் பெரு மரியாதை!” என்று குறிப்பிட்டுள்ளார்.