நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடிய போதே இந்தப் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.

பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார். அதன் பின்னர் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.