மக்களின் எண்ணங்களை உள்வாங்கி தீர்வை முன்வைக்க வேண்டும்!

மக்களின் எண்ணங்களை உள்வாங்கி தீர்வை முன்வைக்க வேண்டும்!

தற்போதைய சூழ்நிலையில் மக்களின் எண்ணங்களை உள்வாங்கி அதனடிப்படையில் தீர்வை முன்வைக்க வேண்டியது அவசியமென அஸ்கிரிய மஹாநாயக்க பீடத் தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ மக்களினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நிலையானதொரு தன்மையை பேணாது செயற்படுகின்றார்கள்.

இவர்களின் செயற்பாடுகளினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.

ஆகையால் மக்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு மரியாதை கொடுத்து அதனடிப்படையில் தீர்வை முன்வைத்து நாட்டின் அரசியலை சுமூகமான நிலைமைக்கு கொண்டுவர ஜனாதிபதி செயற்பட வேண்டும்” என அஸ்கிரிய மஹாநாயக்க தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.