தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!

தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவினை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை நியமித்தமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இடைக்கால உத்தரவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தென்னிலங்கை அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் ஒருபோதும் செய்யாத காரியத்தை இன்று நீதிமன்றம் செய்துள்ளதாக மஹிந்த விமர்சித்தார்.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தினால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதில்லை.

எனினும் ஜனாதிபதி மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளனர்.

இதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வழமையை போன்று நடத்திச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹென்பிட்டிய அபயராமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் தீர்ப்புகளை எந்தவொரு நபரும் விமர்சிக்க முடியாது. எனினும் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.