முதல் முறையாக 280 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிபட்டது!!

வரலாற்றில் முதல் முறையாக 280 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிபட்டது!!

231 கிலோ 54 கிராம் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலப்பிட்டிய மற்றும் பேருவளை கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இரண்டாயிரத்து 778 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேருவளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் இதுவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.