திருநகரில் தேங்கிய வெள்ளம் கரைச்சி பிரதேச சபையினால் வெளியேற்றல்!

திருநகரில் தேங்கிய வெள்ளம் கரைச்சி பிரதேச சபையினால் வெளியேற்றல்!

கிளிநொச்சி திருநகர் பகுதியில் நோய் பரவக்கூடிய வகையில் தேங்கி காணப்பட்ட வெள்ளநீர் கரைச்சி பிரதேச சபையினால் வெளியேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, திருநகர் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் நீண்ட நாட்களாக அதிக வெள்ளம் காணப்பட்டதுடன் இந்தப்பகுதியில் நோய்கள் பரவக்கூடிய சூழல் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனுக்கு மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து அவ்விடத்தில் விரைந்து பிரதேச சபையின் கனரக வாகனத்தை கொண்டு வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை அவர் மேற்கொண்டுள்ளார்.