விஜயகலா மீது நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

விஜயகலா மீது நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

விடுதலைப்புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான வழக்கு விசாரணை 2019 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் இன்னும் கிடைக்காத காரணத்தினால் அதன் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் விஜயகலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.