முல்லைத்வில் பாடசாலை சீருடையுடன் சிறுவன் தற்கொலை!

முல்லைத்வில் பாடசாலை சீருடையுடன் சிறுவன் தற்கொலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பகுதியில் வசித்துவரும் 14 அகவையுடைய பாடசாலை சிறுவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பாடசாலை சமூகமே பொறுப்பு கூறவேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பில் மனிதஉரிமை ஆணைக்கழுவில் முறையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செம்மலை மகாவித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்விகற்கும் சிறுவன் தற்கொலை செய்து கொண்டமையானது மாணவனை உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியிலும் கல்வி சமூகம் பாதிக்க செய்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.