வெளிநாட்டு துப்பாக்கிகளை கைபற்றிய பொலிஸார் குற்றவாளிகள் தலை மறைவு !!!

உடுகம -கொத்தல்லாவ பகுதியில் பொலிசார்  கடமையில் இருந்த போது மோட்டார் சைக்கிளுடன் துப்பாக்கி ரவை என்பன விட்டுசென்ற குற்ற சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .இது தொடர்பில் மேலும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றைய தினம் இரவு 10.20 மணியளவில் உடுகம -கொத்தல்லாவ பிரேதேசத்தில் இரவு கடமையில் பொலிசார் ஈடுபட்டிருந்த சமயம் அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர் பிரதான மின்விளக்கு ஒளிரா நிலையில் வந்துள்ளனர்.

எனவே அவர்களுக்கு சமிஞ்சை காட்டி பொலிசார் நிறுத்திய போதும் நிறுத்தாது சென்றுள்ளனர் . சந்தேக பட்ட பொலிசார் அவர்களை மேலும் தொடர அவர்கள் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பியோடி உள்ளனர் . பின்னர் அதை ஆராய்ந்து பார்த்த இடத்தில் மோட்டார் சைக்கிளுடன் வெளிநாட்டு ரக துப்பாக்கி ஒன்றும் அதனுடன் பொருந்தும் ரவைகளும் மீட்கப்படுள்ளது .

மேலும் அவர் தெரிவிக்கையில் தப்பிச்சென்ற சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை உடுகம பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.