மைத்திரி- மகிந்தவின் சூழ்ச்சி 19 வது திருத்தம் அரங்கேறுமா???

19 வது அரசியலமைப்பு திருத்தம் பரவலாக மகிந்த மைத்திரி தரப்பால் குற்றம் சாட்ட படுவதை தொடர்ந்து  அகில விராஜ் கரியவசம் கருத்து தெரிவிப்பு

“சட்ட விரோதமாக மகிந்தவை பிரதமராக நியமித்த மைத்திரி பல வழிகளில் முயற்சித்தும் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்ற தடையாக உள்ள  19 வது  அரசியலமைப்பு  திருத்தத்தை குறை கூற ஆரம்பித்துள்ளனர் ” என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் கரியவசம் தெரிவித்தார் .

மைத்திரி மகிந்த தரப்பு பரவலாக 19 வது அரசியலமைப்பு  திருத்த சட்டத்தை  சாடி வரும் நிலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில்,

2015 ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி  ஜனாதிபதிக்கு அது வரை காலம் இருந்த  நிறைவேற்று அதிகாரத்தை மட்டு படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலும் நிறைவேற்றபட்டது இந்த 19 வது அரசியலமைப்பு திருத்தம்.அப்போது இனித்த 19 வது அரசியலமைப்பு  திருத்தம் இன்று மைத்திரி- மகிந்த தரப்புக்கு  கசக்கிறது .தொடர்ந்தும்  அதன் மீது  குற்றம் சாட்ட பட்டு வருகிறது.

.