யாழில் அடையாளந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!!

யாழில் அடையாளந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த வீட்டின் மீது நேற்றிரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் குண்டுத்தாக்குதல் காரணமாக ஹயேஸ் வாகனம் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் காயமுற்ற 53 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன் என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் யாழ். நகரத்தை அண்டிய பிரதேசத்திலும் இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.