காரைதீவில் பாரை மயம்: விற்பனை ஒரு கோடி ரூபாவைத் தாண்டியது (Photos)

puli012

அம்பாறை மாவட்டம் காரைதீவுக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை பாரைமீன்கள் மிகவும் அதிகமாகப் பிடிப்பட்டன. ஒரு தோணிச் சொந்தகாரருக்கு 1 கோடி ரூபாவிற்கும் அதிகமான மீன்கள் பிடிபட்டன. ஒரு பாரைமீன் 1000 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்கப்பட்டது.

அதிகமான பாரை மீன்கள் பிடிப்பட்டதைக் கேள்வியுற்ற பலர் வெள்ளிக்கிழமையென்பதையும் பொருப்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக கடற்கரையை நோக்கிப் படையெடுத்தனர்.

அண்மையில் இதே பாணியில் கீரி மீன்கள் பிடிப்பட்டமை தெரிந்ததே. பாரை மீன்கள் பிடிபடுவதையும், மீனவர்கள் அதனைக் கரை சேர்ப்பதையும் வியாபாரிகள் ஏலம் பேசுவதையும் காணலாம்.

IMG_0246-600x450 IMG_0262-600x405 unnamed-79-600x448 unnamed-422-600x448