தடைசெய்யப்பட்ட களைநாசினியை கடத்தல்

இன்று தடைசெய்யப்பட்ட களைநாசினியை கடத்திசெல்ல முயன்ற இருவரை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசுவாகனத்தை செட்டிகுளம் நகர்ப்பகுதியில் வழிமறித்த பொலிஸார் அதில் சோதனைகளை மேற்கொண்டபோது தடைசெய்யபட்ட களைநாசினியை யூரியாபையில் கடத்திசெல்வது தெரியவந்தது.

குறித்த சொகுசுவேனிலிருந்து சிறுபைகளாக பொதிசெய்யபட்ட ஆறு ஆயிரம் கிலோ நிறையுடைய தடைசெய்யபட்ட கிளைபோசெட் மருந்துகளை பொலிஸார் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார்  முப்பத்தி ஒன்பது இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர். வேனில் பயணித்தவர்களை கைதுசெய்த பொலிஸார் பயணித்த வாகனத்தையும் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்துசென்றனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது