ஜம்மு – காஷ்மீரில் இவ்வாண்டில் மட்டும் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சியொன்றில் இன்று (சனிக்கிழமை) பங்கேற்றபின்னர் செய்தியாளர்களிடம் கருத்துக் கூறும்போது ஜம்மு – காஷ்மீரில் இவ்வாண்டில் மட்டும் 225 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்

மேலும் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.“பாகிஸ்தான் இராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு – காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் குறித்து உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு உரிய தகவல் அளித்து வருகின்றனர்.

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீரை தாண்டி பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் முயற்சி செய்கிறது.ஜம்மு – காஷ்மீரில் அமைதி நிலவுவதை உறுதி செய்வோம். இதனை தடுக்க ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்யும்” என்று தெரிவித்தார்.