பல நாடகங்களை அரங்கேற்றும் மகிந்தா!!!!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின், மகா நாயக்கர் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகிந்தா

” பதவிகளை எதிர்பார்த்து தாம் ஒரு போதும் செயற்படவில்லை”என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய மக்களின் எதிர்ப்பார்ப்பு பொது தேர்தல் ஒன்றே என அவர் குறிப்பிட்டார்.

தற்போது அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான அரசியலில் தாங்கள் கட்சி ஈடுபட்டு வருதாக தெரிவித்தார்.

ஆனால் பதவிகளைப் பெறுவது தங்களது எதிர்ப்பார்ப்பு இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.