ஜனநாயகத்தை காப்போம் என்று கொடி தூக்கும் ஜெ.வி.பி

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று 08 .12 .2018 ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்ககும்போது நாம் யாரையும் நம்பவில்லை ஜனநாயகமே எங்கள் போராட்டம் என்றார் ;அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா.

மேலும் தெரிவித்ததாவது எமக்கு ரணில் விக்ரமசிங்க மீதும் நம்பிக்கையில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் நம்பிக்கையில்லை ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராடுகின்றோம்.

தொடர்ந்தும் அவர் ஜனநாயகத்துக்காக போராடுவதாலேயே நாம் மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் .

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க மாட்டோம் எனவும் அவர் காரசாரமாக குறிப்பிட்டுள்ளார்.