தந்தைக்கும் மகளுக்குமான வீட்டுபோர் ஞாயம் வெல்லும் : விஜயகுமார்

கடந்த காலங்களில் சினிமாவில் விரல் விட்டு எண்ண கூடிய பிரபலங்களில் ஒருவரான விஜயகுமார் தனது .சொந்த வாழ்வில் அவரது மகள்  வனிதா விஜய குமாரினால் பலவாறு சாடப்பட்டு வருகிறார்.

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக சென்னை ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதை அவர் படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன் அந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்த மகள் வனிதா அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்தார். இதுபற்றி விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறை அந்த வீட்டை விட்டு வெளியேற்றியது.பொலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

நேற்று வனிதா திரும்பவும் ஆலப்பாக்கம் பங்களாவுக்குள் நுழைந்தார். உடனே பொலீசார் அவரை வெளியேற்றினார்கள். இதனால் வனிதா முதல்-அமைச்சரை சந்திக்க முயன்று திரும்பினார். இதுபற்றி விஜயகுமாரை கூறியதாவது

‘‘தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான் வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே இதைப் பத்தி பேட்டியெல்லாம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லைங்க’’ இவ்வாறு வருத்தமாகச் சொன்னார். வனிதாவிடம் அவர் தரப்பு கருத்தைக் கேட்பதற்காக முயற்சி செய்தபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் நிலையிலேயே இருந்தது.