அழிவின் பிடியில் இருக்கும் நீர்நாயின் உணவு பழக்கத்தால் இந்த வினை வந்திருக்குமோ ஆய்வாளர் சந்தேகம்!!!!

இந்த வாரம், அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் இந்த சிறுவயது நீர்நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதில் மூங்கில் பாம்பு போன்ற  மீன் ஓன்று அதன் மூக்கில் சிக்கியுள்ளது.

ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாய்கள் தனது உணவை கண்டுபிடித்தவுடன் அது பேரார்வத்துடன் தனது உணவை அங்கும் இங்கும் தூக்கியெறியும் பழக்கத்தையும் கொண்டவை.

இவை உணவுக்காக, பவளப்பாறைகளையோ, மணலையோ, பாறையையோ தன் வாயையோ மூக்கையோ வைத்து முட்டும்போது இந்த பாம்பு போன்ற மீன் அதன் மூக்கில் மாட்டிருக்கலாம் என்றும், அந்த மீனுக்கு தப்பி செல்ல வழி இல்லாமல் அது சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காரணம் எது என்று தெளிவாகவில்லை.