எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி!

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி தன்னுடைய கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

அதன் படி உலகத்தின் சமாதானமும், நல்லெண்ண செயற்பாடுகளுமே எப்போதும் அவசியமானது என பிரித்தானிய மகாராணி கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அத்தோடு மக்கள் மரியாதையுடனும் மனித நேயத்துடனும் நடந்துகொள்வதே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்க்கு வித்திடும் என்றும் அவர் கூறினார்.

ஜேசு கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்மஸ் தினம் நாளை உலகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா உள்ளிட பல நாடுகளில் இம்மாதத்தின் ஆரம்பதிலேயே கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது