ராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன்!

ராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன்!

கருத்து முரண்பாடு காரணமாக திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என பிரபாஸ் கூறியுள்ளார்.

நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் கரண் ஜோஹருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டனர்.

இதன்போது திரிஷாவுடனான காதல் குறித்து ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரபாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

‘‘ராணாவையும் திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்றார்.

மேலும் அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது குறித்து கேட்ட போது, “எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

திரிஷாவுடனான காதல் குறித்து ராணாவிடம் கேள்வியெழுப்பிய போது “எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக நீண்ட நாள் தோழி. சிறிது காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் கருத்து முரண்பாடு காரணமாக காதலை முறித்துக்கொண்டேன்.’’ என தெரிவித்தார்.

பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது குறித்து தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.